இந்தியா

30 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக கவுன்சிலர் மகன் - சிக்கியது எப்படி? | Goa

சோனம் நாயக் 100க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கோவா மாநில காங்கிரஸ் தலைவர் அமித் பட்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவாவில் பாஜக கவுன்சிலரின் மகன் பல சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்துள்ள புகார் அம்மாநிலத்தில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு கோவாவின் குர்ச்சோரம் நகராட்சி பாஜக கவுன்சிலரும் தொழிலதிபருமான சுஷாந்த் நாயக்கின் 20 வயது மகன் சோகம் நாயக்.

இவன் கடந்த 3 ஆண்டுகளாக 25 முதல் 30 சிறுமிகளை காலதலிப்பதாக ஏமாற்றி காதல் வலையில் வீழ்த்தி, அவர்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளான்.

நண்பர்களுடன் வெளியே ஒன்றாக மதுபானம் குடித்து கொண்டு மதுபோதையில் இருந்தபோது, பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வீடியோக்களை அவர்களிடம் காட்டியுள்ளான்.

அவர்கள் மூலம் இந்த தகவல்கள் வெளியே கசிந்தன. இதனால், அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் திரண்டு சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகையிட்டனர்.

இதைத்தொடர்ந்து போக்சோவின் கீழ் சோனம் நாயக் கைது கைது செய்யப்பட்டார். இதுவரை மூன்று சிறுமிகள் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே சோனம் நாயக் 100க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கோவா மாநில காங்கிரஸ் தலைவர் அமித் பட்கர் குற்றம்சாட்டியுள்ளார்.