இந்தியா

64 வயது தாயை தொடர் பாலியல் வன்கொடுமை செய்த மகன் கைது.. டெல்லியில் கொடூரம்

அவரது கடந்த கால உறவுக்கான தண்டனை என்று தெரிவித்துள்ளார்.இளைய மகளிடம் நடந்ததைக் கூற, இருவரும் ஹவுஸ் காசி காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர்.

மாலை மலர்

டெல்லியில் 39 வயது மகன், தனது 65 வயது தாயாரை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

புகாரின்படி, தயார் தனது இளம் வயதில் தகாத உறவில் இருந்ததாக கூறி, ஆகஸ்ட் 11 அன்று இரவு 9:30 மணியளவில், தனது தாயை தனிஅறையில் பூட்டி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதை அவரது கடந்த கால உறவுக்கான தண்டனை என்று தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 14 அன்று இரண்டாவது முறையாகவும் அவரை தாயை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

மறுநாள், தாய் தனது இளைய மகளிடம் நடந்ததைக் கூற, இருவரும் ஹவுஸ் காசி காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, மகன் கைதுசெய்யப்பட்டார்.