இஸ்ரேலின் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் விமான கேப்டன் ஸ்மித் மச்சாருடன் இணைந்து கலந்துகொள்ள, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்;
“நான் எனது நண்பரான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினேன், மேலும் இஸ்ரேலின் சுதந்திர தினத்தன்று ஒரு துணிச்சலான இந்திய விமானியுடன் இணைந்து தீபம் ஏற்ற அவருக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.
இந்த அழைப்பிற்கு நன்றி தெரிவித்த மோடி, நிலத்திலும், வான்வெளியிலும் இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடி வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக நீடிக்கும் வலுவான உறவையும் அவர் பாராட்டினார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபாய் FZ1073 விமானத்தை, சக ஓமன் நாட்டு விமானி வெடிக்க செய்ய முயன்றதை தடுத்தற்காக, இந்திய விமானி ஸ்மித் மச்சாரை இஸ்ரேல் கௌரவிக்க இருக்கிறது.
இந்நிலையில் இஸ்ரேலின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் ஸ்மித் மச்சாருடன் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மே 14-ஐ 'யோம் ஹாட்ஸ்மாவுட்' அல்லது இஸ்ரேலின் தேசிய தினமாகக் கடைப்பிடிக்கிறது.