கோபம் அடைந்த பஞ்சாயத்து தலைவர் சர்மா, தனது தனிப்பட்ட நிலத்தில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் ஒயர்களை அகற்ற வேண்டும் என்று மின்வாரியத்துக்கு 'கெடு' விதித்துள்ளார்.
அரியானா மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் கபஹடா கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் வினய்குமார் சர்மா. இந்த கிராமத்தின் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தக்கூடாது என்று பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மின்வாரிய செயற்பொறியாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதையும் மீறி, மின்வாரிய ஊழியர்கள் வந்தபோது, தனது வீட்டில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த சர்மா மறுத்து விட்டார். 24 மணி நேரத்தில் பொருத்துமாறு மின்வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. அதைத்தொடர்ந்து, அவரது வீட்டுக்கு மின்வினியோகத்தை துண்டித்தது.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடும் கோபம் அடைந்த பஞ்சாயத்து தலைவர் சர்மா, தனது தனிப்பட்ட நிலத்தில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் ஒயர்களை அகற்ற வேண்டும் என்று மின்வாரியத்துக்கு 'கெடு' விதித்துள்ளார்.