இந்தியா

எஸ்.ஐ.ஆர். விவகாரம்: அக்.6 தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு போராட்டம் - இந்தியா கூட்டணி அறிவிப்பு!

முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து அக்டோபர் 2முதல் 8ம் தேதிவரை நாடு முழுவதும் ‘ஜனநாயகம் காப்போம்’ என்ற தலைப்பில் பேரணியையும் அறிவித்துள்ளது.

இந்திய வாக்காளர்கள் பட்டியல்களை புதிப்பதற்காக, தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை கண்டித்து அக்டோபர் 6ம் தேதி இந்தியா கூட்டணி முற்றுகைப் போராட்டம் அறிவித்துள்ளது.

தலைமை தேர்தல் ஆணையத்தை முற்றுகை இடும் இந்த போராட்டத்திற்கு முன்பு, அக்டோபர் 2ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து அக்டோபர் 2முதல் 8ம் தேதிவரை நாடு முழுவதும் ‘ஜனநாயகம் காப்போம்’ என்ற தலைப்பில் பேரணியையும் அறிவித்துள்ளது.

டெல்லியில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கூட்டத்தை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆலோசனைக் கூட்டம்

எஸ்ஐஆர் பணிகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்துவது தொடர்பாகவும் விவாதிப்பதற்காக இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுனே கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, உமர் அப்துல்லா, தேஜஸ்வி யாதவ், மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜூனே கார்கே, ​​மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக மீண்டும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், இதற்கு இந்தியக் கூட்டணி தலைவர்கள் உடன்படுவதாகவும் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT