இந்தியா

குவாலியரில் அதிர்ச்சி: மனைவியை கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன்!

கொலை செய்யப்பட்ட மதுவுக்கும், ஆனந்த் ஸ்ரீவாஸ்தவாவுக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் நன்னாளில் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் நேராக காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குவாலியரின் முரார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவம், கணவன்-மனைவி இடையேயான உறவில் ஏற்பட்ட தீராத மோதலின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

ஆனந்த் ஸ்ரீவாஸ்தவா என்பவன் தனது மனைவி மது ஸ்ரீவாஸ்தவாவை இரும்புக் கருவியால் தலையில் பலமுறை பலமாகத் தாக்கியுள்ளான். கார்வா சௌத் பண்டிகையை கொண்டாட பெண்கள் அனைவரும் விரதமிருந்து கணவனின் நீண்ட ஆயுளை வேண்டி காத்திருக்கும் வேளையில், மது தனது கணவனின் கையாலேயே கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது குடும்பத்தினரையும் உறவினர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த மது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மனைவியைக் கொன்ற பிறகு சிறிதும் பதற்றமின்றி காவல் நிலையத்திற்கு நடந்து சென்ற ஆனந்த் ஸ்ரீவாஸ்தவா, தான் செய்த கொலையைத் காவல்துறையினரிடம் வெளிப்படையாக ஒப்புக்கொண்டான். தான் தான் மனைவியைக் கொலை செய்ததாகக் கூறி அவன் சரணடைந்ததைக் கேட்டு காவல்துறையினரே ஆரம்பத்தில் அதிர்ந்துபோயினர். உடனடியாக அவனைக் கைது செய்த காவல்துறையினர், கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

காதல் திருமணம்

கொலை செய்யப்பட்ட மதுவுக்கும், ஆனந்த் ஸ்ரீவாஸ்தவாவுக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். பல ஆண்டுகள் அன்பாக வாழ்ந்து வந்த தம்பதியரிடையே சமீப காலமாகத் குடும்பத் தகராறுகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தீராத வன்மம் பண்டிகை நாளின் ரத்தம் சிந்துவதில் போய் முடிந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT