மும்பை:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையே, மகாராஷ்டிராவில் பாராளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே கருத்து வேறுபாடு எழுந்தது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சிக்கு 21 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளிலும் போட்டியிடுவது என உடன்பாடு எட்டப்பட்டது.