ஷேசாத் பூனவாலா
இந்தியா

பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா திடீர் விலகல்..!

பா.ஜ.க.வின் தேசிய செய்தித் தொடர்பாள ஷேசாத் பூனவாலா, திடீரென அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். எக்ஸ் பக்கத்தில் உள்ள Bio-வில் பாஜக என்பதை நீக்கியுள்ளார்.

பா.ஜ.க.-வின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்து வந்தவர் ஷேசாத் பூனவாலா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் தேர்தல் தொட்ரபாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். பின்னர் பாஜக-வின் இணைந்தார்.

காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தவர் ஷேசாத் பூனவாலா

பிரதமர் மோடியின் மிகப்பெரிய ஆதரவாளராக திகழந்து வந்தார். சமூக வலைத்தளத்தில் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை கடுமையாக விமர்சித்து வந்தார். காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பாஜக சார்பில் பதில் கொடுப்பதில் முன்னணி தலைவராக விளங்கி வந்தார்.

இந்த நிலையில் திடீரென தேசிய செய்தித் தொடர்பாளர் பதவி மட்டும் அல்ல, பாஜக-வில் இருந்தே விலகியுள்ளார். இது தொடர்பாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், தனது எக்ஸ் Bio-வில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் என்பதை நீக்கியுள்ளார்.

பாஜக தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் "நரேந்திர மோடி ஜி போன்ற, சொந்த முயற்சியால் முன்னேறிய ஒருவரை பாஜகவால் மட்டுமே உங்களுக்குத் தர முடியும்; மற்றவர்களோ தங்கள் வாரிசுகளையும் குடும்ப ஆதிக்கத்தையுமே முன்னிறுத்துவார்கள். எனவே, இளைஞர்களுக்கு பாஜகவே மிகச் சிறந்த தேர்வாகத் திகழ்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

சமீபத்தில் அவர் பதிவிட்டிருந்த வீடியோக்கள், அரசியலில் இருந்து ஒதுங்குவது குறிப்பது போன்று இருந்ததாக கூறப்படுகிறது.

தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சியில் இருந்து விலகியதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும், கட்சிக்குள் நிலவிய அதிருப்தி, கருத்து வேறுபாடுகள், மரியாதைக் குறைவு போன்றவையும் காரணங்களாக இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.