மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவராக இருந்த பிரசூன் ஜோஷி, இந்தியாவின் பொது சேவை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். எனவே அவருக்கு பதிலாக திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவராக சசிசேகர் வேம்பதி மத்திய அரசால் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் 3 ஆண்டுகள் இந்த பதவியை வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
சசிசேகர் வேம்பதி, இதற்கு முன்பு பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.