இந்தியா

சரத் பவார் கட்சிக்கு புதிய பெயர்: தேர்தல் ஆணையம் ஒப்புதல்

அஜித் பவாரின் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை அஜித் பவாருக்கு கொடுப்பது என தேர்தல் ஆணையம் முடிவுசெய்தது.

மாலை மலர்

புதுடெல்லி:

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிக எம்.எல்.ஏ.க்களை சரத் பவாரின் மருமகனான அஜித் பவார் தன் கைவசம் வைத்துள்ளார். இதனால் அஜித் பவாரின் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை அஜித் பவாருக்கு கொடுப்பது என தேர்தல் ஆணையம் நேற்று முடிவு செய்தது. இதனால் மூத்த தலைவரான சரத் பவாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்ற மேலவை தேர்தலை முன்னிட்டு அணியின் பெயரை தேர்வு செய்யும்படி சரத் பவார் கேட்டு கொள்ளப்பட்டார். 7-ம் தேதி பிற்பகலுக்குள் அவர்களுடைய அணியின் பெயர் மற்றும் அடையாளம் ஆகியவற்றை தெரிவிக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டது.

இந்நிலையில், சரத் பவார் தனது கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத்சந்திர பவார் என பெயர் சூட்டினார். இவரது கட்சி பெயருக்கு தேர்தல் ஆணையம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.