இந்தியா

பாலியல் குற்றச்சாட்டு- பிரிஜ் பூஷண் சிங்கை விடுவித்து நீதிமன்றம் உத்தரவு

நீதிபதி அஷ்வினி பன்வார் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில், பாஜக மூத்த தலைவரும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் ஷரண் சிங்கை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் விடுவித்துள்ளது.

நீதிபதி அஷ்வினி பன்வார் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை இன்-கேமரா முறையில் நடைபெற்றது.

கடந்த 2023-ஆம் ஆண்டு முன்னணி மகளிர் மல்யுத்த வீராங்கனைகள், பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மீது பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது. உச்சநீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகு டெல்லி போலீஸ் எப்.ஐ.ஆர் பதிவு செய்து, பின்னர் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.

பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் தொல்லை, பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் பலவந்தமாக நடந்துகொண்டது, மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

பின்னர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது அவரை நீதிமன்றம் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்துள்ளது.