இந்தியா

வந்தே பாரத் ரெயில் உணவால் அதீத ஒவ்வாமை.. குழந்தைக்கு வயிற்றுப்போக்கு - பெண் புகார் - IRCTC கொடுத்த பதில் வைரல்

இதுதொடர்பாக மருத்துவ ஆவணங்களையும் இணைத்து உடனே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் முன்னேற்றங்களில் ஒன்றாக மத்திய அரசால் காட்சிப்படுத்தப்படும் வந்தே பாரத் ரெயில்களில் வழங்கப்படும் உணவு அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி வருகிறது.

அண்மையில் வந்தே பாரத் ரெயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட தயிரில் புழுக்கள் மிதந்த வீடியோ இணையத்தில் வைரலாகி நடவடிக்கைக்கு வழிவகுத்தது.

இந்த சூழலில் வந்தே பாரத் ரெயிலில் பரிபாமரப்பட்ட உணவால் தானும் தனது 2 வயது குழந்தையும் கடும் ஒவ்வாமைக்கு ஆளானதாக பெண் பயணி ஒருவரின் புகார் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் ராஞ்சியை சேர்ந்த ஆயுஷி சிங், கடந்த மார்ச் 27 பயணத்தின்போது வந்தே பாரத் ரெயிலில் பரிமாறட்ட உணவால் தனக்கு கடும் ஒவ்வாமை ஏற்பட்டதாக தனது புகைப்படத்துடன் இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவரின் உதடுகள் கடுமையாக வீங்கியிருப்பதை காண முடிகிறது.

மேலும் அவரின் கூற்றுப்படி, அவர் உட்கொண்ட அதே ரெயில் உணவால் அவரின் இரண்டு வயது குழந்தைக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மருத்துவ ஆவணங்களையும் இணைத்து உடனே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் சமூக வலைதளத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதுபோல உணவின் தரம் குறித்து கூறுகையில் ரெயிலில் இருந்த அதிகாரிகளின் எதிர்வினை குறித்தும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ரெயிலில் வழங்கப்பட்ட தண்ணீர் குறித்தும் அவர் புகார் செய்துள்ளார்.

இந்த பதிவு இணையத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்த ரெயில்வே நிறுவனமான ஐஆர்சிடிசி, பயணி குறிப்பிட்ட அந்த தினத்தில் அவர் சென்ற ரெயிலில் வழங்கப்பட்ட உணவு குறித்து செய்த பரிசோதனையில் அந்த உணவு உண்ண ஏற்புடையதாகவே இருந்ததாக தெரிவித்துள்ளது.

இந்த பெண்ணை தவிர வேறு யாரும் அன்று பரிமாறப்பட்ட உணவு, அடின்னெர் குறித்து புகார் கூறவில்லை என ஐஆர்சிடி தெரிவித்துள்ளது.

ஆனால் பெண்மணி பகிர்ந்துள்ள தனது குழந்தையின் மருத்துவ ஆவணங்கள் குறித்து என்ன சொல்கிறீர்கள் என நெட்டிசன்கள் ஐஆர்சிடிசியை வறுத்தெடுத்து வருகின்றனர்.