மும்பையில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, செவ்வாயன்று அந்நகருக்கு வந்த சுமார் 11 விமானங்கள் அருகில் உள்ள பல்வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
11 விமானங்களில், ஐந்து இண்டிகோ நிறுவனத்திற்கும், நான்கு ஏர் இந்தியா நிறுவனத்திற்கும், தலா ஒன்று ஆகாசா ஏர் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களுக்கும் சொந்தமானவை என்று அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்த விமானங்களில் ஆறு விமானங்களான 6E864 (டெல்லி-மும்பை), 6E2017 (திருச்சிராப்பள்ளி-மும்பை), AI2941 (டெல்லி-மும்பை), AI640 (சென்னை-மும்பை), 6E5104 (சென்னை-மும்பை) மற்றும் AI2746 (கோ-மும்பை) ஆகியவை சூரத்திற்குத் திருப்பி விடப்பட்டன.
அதே சமயம், QP1150 (பெங்களூரு-மும்பை), 6E5259 (ஐதராபாத்-மும்பை) மற்றும் 6E5163 (ஜாம்நகர்-மும்பை) ஆகிய மூன்று விமானங்கள் அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீதமுள்ள இரண்டு விமானங்களான ஏ12447 (ஐதராபாத்-மும்பை) மற்றும் 6E5163 (உதய்பூர்-மும்பை) ஆகியவை முறையே பரோடா மற்றும் நாசிக் விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.