இந்தியா

விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்- என்ஐஏ விசாரணை

கடந்த வாரத்தில் மட்டும் 100 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் உளவுத்துறை விசாரணை நடத்துகிறது.

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாகவே இந்திய விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த வாரத்தில் மட்டும் 100 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் தொடர்பாக என்ஐஏ களத்தில் இறங்கினர்.

மிரட்டல் வந்த இ மெயில் முகவரி மற்றும் சமூக வலைதள முகவரியை வைத்து தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் உளவுத்துறை விசாரணை நடத்துகிறது.

பாதுகாப்பு அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்துகிறது.