Stock Market 
இந்தியா

Stock Market | இன்று இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி - ரூ.9 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்

இன்று (வியாழக்கிழமை) மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.

மாலை மலர்

ஈரானின் எரிசக்தி உற்பத்தி மையமாகக் கருதப்படும் தெற்கு பார்ஸ் எரிவாயு வயலையும், எண்ணெய் வசதிகளையும் இஸ்ரேலியப் படைகள் நேற்று தாக்கின. .ஈரானின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி வசதிகள் தாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக கத்தாரின் ராஸ் லஃபான் தொழில்துறை நகரத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG ஆலை மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் கடுமையான சேதத்தை விளைவித்துள்ளதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரானின் இந்த பதிலடி தாக்குதலால் இன்று (வியாழக்கிழமை) மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. இதனால் முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட ரூ.9 லட்சம் கோடியை இழந்தனர்.

இன்று சென்செக்ஸ் 2019 புள்ளிகள் சரிந்து 74,685 என்ற நிலைக்கு வந்தது. இது கடந்த 6 மாதத்தில் இல்லாத மிகப்பெரிய வீழ்ச்சியாகும். நிஃப்டி சுமார் 597 புள்ளிகள் வரை சரிந்து 23,180 புள்ளிகள் என்ற நிலைக்குச் சென்றது. இதுவும் கடந்த 1 ஆண்டில் இல்லாத மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.

ஈரான் - இஸ்ரேல் மோதல் உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளன. குறிப்பாக அரபு நாடுகளின் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடந்த ஒரு மாதமாக இந்திய பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.

மத்திய கிழக்கு போரால் இந்தியா மட்டுமில்லாமல் ஜப்பான், தென் கொரியா உட்பட பெரும்பாலான ஆசிய நாடுகளின் பங்குச்சந்தைகளும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.