தேர்தல் ஆணையம் 
இந்தியா

Bye Election | கோவா, குஜராத் உள்ளிட்ட 6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

மாலை மலர்

மகாராஷ்டிரா, குஜராத், கோவா உள்ளிட்ட காலியாக உள்ள 6 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் கோவாவில் காலியாக உள்ள 8 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மகாராஷ்டிரம், குஜராத்தில் ஏப்ரல் 23-ம் தேதியும், கர்நாடகம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் கோவாவில் ஏப்ரல் 9ம் தேதியும் வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கோவாவில் - போன்டா, குஜராத்தில் - அம்ரேத், கர்நாடகத்தில் - பாகல்கோட், தாவநாகரி தெற்கு, மகாராஷ்டிரத்தில் - ராஹூரி, பாராமதி, நாகாலாந்தில் - கோரிடாங்க், திரிபுராவில் - தர்மாநகர்

வாக்குப்பதிவு முடிந்து மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும், அதன் தொடர்ச்சியாக தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.