சேகர் ரெட்டி 
இந்தியா

தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு எதிரான வழக்கு ரத்து- உச்சநீதிமன்றம் அதிரடி

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நிலையில் சேகர் ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

மாலை மலர்

புதுடெல்லி:

தொழிலதிபர் சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  

கடந்த 2016-ஆம் ஆண்டு சேகர் ரெட்டி,  அவரது உறவினர் மற்றும் ஆடிட்டர் வீடு அலுவலங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அந்த சோதனையில் 147 கோடி ரூபாய்க்கு பழைய 500, 1000 நோட்டுகள், புதிய 2000 நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. இத்துடன் 178 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

அப்போது மத்திய அரசு பண மதிப்பிழப்பு அறிவித்த 24 நாட்களில் 34 கோடிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கிடைத்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்த விவகாரத்தில் சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க உத்தரவிடுமாறு சேகர் ரெட்டி தரப்பில் மனு வழங்கப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. 

இதை தொடர்ந்து சேகர் ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்  அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.