மகாதேவ் செயலி ஆன்லைன் சூதாட்ட மோசடியில் சூத்திரதாரி ஓமனில் இருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்
மகாதேவ் செயலி ஆன்லைன் சூதாட்ட வலையமைப்பின் முக்கிய சூத்திரதாரி எனக் கூறப்படும் சத்தீஸ்கரை சேர்ந்த சௌரப் சந்திரகரை ஓமானிலிருந்து சிபிஐ அதிகாரிகள் வெற்றிகரமாக நாடு கடத்தியுள்ளனர்.
சிபிஐ-யின் சிறப்பு குழு ஒன்று மஸ்கட்டில் சந்திரகரை கைது செய்து இந்தியாவிற்கு அழைத்து வந்தது.
மருத்துவப் பரிசோதனைகளை முடித்து, இடைக்காலக் காவல் பெற்ற பிறகு, அவர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார்.
சௌரப் சந்திரகர் மீது இரண்டு சிபிஐ வழக்குகளிலும், ஒரு அமலாக்கத்துறைவழக்கிலும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளில் அரசுத் தரப்பு புகார்கள் தாக்கல் செய்யப்பட்டு, அவரது பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
மகாதேவ் கும்பல் வெளிநாட்டில் இருந்து, உரிமம் பெற்ற குழுக்களின் வலையமைப்பு மூலம் சட்டவிரோத இணையவழி சூதாட்டம் நடத்தியது தெரியவந்தது.
இதில் கிடைத்த சட்டவிரோத வருமானம், இடைத்தரகர் வங்கிக் கணக்குகள் மூலம் அனுப்பப்பட்டு, ஹவாலா வழிகளைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளது.
தங்கள் நடவடிக்கைகளை மறைக்க அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கவும் அந்த பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, ஊழல் தடுப்புச் சட்டம், மோசடி மற்றும் சதி தொடர்பான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் கீழ் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸைத் தொடர்ந்து, சந்திரகர் முதலில் ஓமன் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டார்.
சிபிஐ ஆதாரங்களை சமர்ப்பித்த பிறகு, அவரை நாடு கடத்தும் நடவடிக்கை இறுதி செய்யப்பட்டு வெற்றிகரமான நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ஒரு பெரும் வெற்றி என்று குறிப்பிட்ட சிபிஐ, ஓமன் காவல்துறை மற்றும் ஓமன் அரசாங்கத்தின் உதவிக்குப் நன்றி தெரிவித்தது.