தலைமை செயலாளர் டாக்டர்.வேணு மற்றும் அவரது மனைவி சாரதா முரளீதரன். 
இந்தியா

கணவரை தொடர்ந்து தலைமை செயலாளராக பொறுப்பேற்கும் மனைவி

சாரதா முரளீதரன் கடந்த 1990-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். வருகிற 1-ம் தேதி கேரளாவின் புதிய தலைமை செயலாளராக சாரதா முரளீதரன் ஐஏஎஸ் பொறுப்பேற்க உள்ளார்.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரளாவில் அரசு தலைமைச் செயலாளராக இருப்பவர் டாக்டர் வி.வேணு. கடந்த ஆண்டு வேணு கேரள அரசு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் வருகிற 31-ம் தேதியுடன் வேணு ஓய்வு பெறுகிறார். இதைதொடர்ந்து திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது.

மந்திரி சபை கூட்டத்தில் புதிய தலைமை செயலாளராக வேணுவின் மனைவியான ஐஏஎஸ் அதிகாரி சாரதா முரளீதரனை நியமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சாரதா முரளீதரன் கடந்த 1990-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். தற்போது இவர் திட்டக்குழு கூடுதல் தலைமைச் செயலராக உள்ளார்.

கேரளாவில் கணவரை தொடர்ந்து மனைவி தலைமை செயலாளராக தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 1-ம் தேதி கேரளாவின் புதிய தலைமை செயலாளராக சாரதா முரளீதரன் ஐஏஎஸ் பொறுப்பேற்க உள்ளார்.