இந்தியா

பாரத ரத்னா எல்.கே.அத்வானி பிறந்தநாள்: மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்த சுதர்சன் பட்நாயக்

இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது, 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் அத்வானிக்கு வழங்கப்பட்டது.

பாரத ரத்னா விருது பெற்ற பாஜக மூத்த தலைவரான எல்.கே.அத்வானியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, ஒடிசா கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் அத்வானி மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களில் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.

பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி இன்று தனது 100-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல் நலத்துடனும் இருக்க வேண்டி பாஜக சார்பில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பத்மஸ்ரீ விருது பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் வாஜ்பாயின் மணல் சிற்பத்தை உருவாக்கி அஞ்சலி செலுத்தினார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், பாரத ரத்னா எல்.கே.அத்வானி அவர்களுக்கு 99 வயது நிறைவடைகிறது; இது இந்தியாவிற்கு மிகுந்த பெருமைக்குரிய விஷயமாகும். தேசத்திற்கு அவர் ஆற்றிய சேவையைக் கருத்தில் கொண்டு, அவரது பிறந்தநாளில் எங்களது கலைப்படைப்பின் மூலம் அவரை கவுரவிக்க விரும்புகிறோம். அவர் மீது தனது அருளைப் பொழியுமாறு ஜகன்னாதப் பெருமானிடம் வேண்டிக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

இந்தியாவின் மிக உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா விருது, 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் அவருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT