இளம்பெண்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் இருவரும் பல்வேறு பெயர்களில் உலா வந்திருப்பது தெரியவந்தது.
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் காலம் என்பதால் கேரளம் மாநிலத்திற்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள்
அதிகளவில் செல்ல தொடங்கி உள்ளனர். இந்த சீசன் காலத்தில் சபரிமலை இருக்கும் பத்தினம்திட்டா மாவட்ட பகுதிகள் மட்டு மின்றி, கேரளத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகளவில் காணப்படும்.
இந்தநிலையில் சபரிமலை யாத்திரை காலத்தில் நிலவும் கூட்டநெரிசலை பயன்படுத்தி பொதுமக்கள் மற்றும் பக்தர்களில் திருட் டில் ஈடுபட வந்தவர்களாக கருதப்படும் 2 இளம்பெண்களை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம் பாறையை சேர்ந்த பார்வதி ஆவார். மற்றொருவர் தமிழகத்தின் தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த கீதா ஆவர். இளம்பெண்களான இவர்கள் இருவரும், பத்தினம்திட்டா அருகே உள்ள கோழஞ்சேரியில் இருந்து ரான்னிக்கு செல்லும் தனியார் பஸ்சில் பயணம் செய்துள்ளனர்.
அப்போது அவர்கள் இருவரும், பஸ்சில் வைத்தே தாங்கள் அணிந்திருந்த உடையை மாற்றியுள்ளனர். அவர்களின் இந்த செயல் அந்த பஸ்சில் பணியில் இருந்த கண்டக்டர் மற்றும் டிரைவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் அந்த பஸ்சை ரான்னி போலீஸ் நிலையத்துக்கு ஓட்டிச் சென்றனர்.
அங்கு இரு இளம்பெண்களையும் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்தபோது இளம் பெண்கள் இருவரும் பதட்டத்துடனும், நடுக்கத்துடனும் பதிலளித்தனர். இதையடுத்து இரு பெண்களுடமும் பெண் போலீசார் மூலம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஒரு இளம்பெண் தனது உள்ளாடைக்குள் 21 ஆயிரம் ரொக்கப் பணத்தை மறைத்து வைத்திருந்தார்.
அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பணம் குறித்து விசாரித்தபோது இருவரும் சரியான பதில் கூறவில்லை. அதே நேரத்தில் அவர்களின் பெயரில் பல திருட்டு வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து இளம்பெண்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் இருவரும் பல்வேறு பெயர்களில் உலா வந்திருப்பது தெரியவந்தது. அதாவது பார்வதி என்ற இளம்பெண் பவானி மற்றும் அனு என்ற பெயர்களிலும், கீதா என்ற இளம்பெண் லட்சுமி மற்றும் பார்வதி என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் பல்வேறு பெயர்களில் கேரள பகுதிகளில் ஆள் மாறாட்டம் செய்து திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. மேலும் அவர்கள் சபரிமலை யாத்திரை காலத்தில் எரிமேலி மற்றும் பிற புனித தலங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடம் திருட்டில் ஈடுபட திட்டமிட்டு வந்திருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர்.
ஆகவே அவர்களிடம் ரான்னி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்குமார் மேற்பார்வையில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.