சபரிமலை அய்யப்பன் கோவில் 
இந்தியா

சபரிமலை நெய் ஊழல்- ஒப்பந்ததாரர் கைது

விசாரணை நடத்த கேரள ஐகோர்ட்டு உத்தரவின் படி சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது.

நெய் ஊழல் தொடர்பாக போக்குவரத்து ஒப்பந்ததாரர் எஸ்.எஸ். பினு என்பவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வழங்கப்பட்ட நெய்யில் முறைகேடு செய்யப்பட்டிருப்பதாக புகார்கள் கூறப்பட்டது. இதன்மூலம் தேவசம்போர்டுக்கு ரூ.2½ கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நெய்

இது தொடர்பாக விசாரணை நடத்த கேரள ஐகோர்ட்டு உத்தரவின் படி சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு விசாரணை நடத்தியதில் சபரிமலைக்கு அனுப்பப்பட்ட ஒரு நிறுவனத்தின் நெய்க்கு பதிலாக மலிவான கள்ள நெய் மாற்றப்பட்டிருந்தது தெரியவந்தது.

முறைகேடு

இந்த முறைகேடு தொடர்பாக போக்குவரத்து ஒப்பந்ததாரர் எஸ்.எஸ். பினு என்பவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். சன்னிதானத்திற்கு விற்கப்பட்ட நெய்யை முறைகேடாக விற்ற வழக்கில் இதுவே முதல் கைது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT