இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு

தந்திரி கண்டரரு மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நடையை திறக்கிறார்.

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மாதம்தோறும் மாதாந்திர பூஜைகளுக்காக திறக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆனி மாத பூஜைக்காக கோவில் நடை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை திறக்கப்படுகிறது.

தந்திரி கண்டரரு மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நடையை திறக்கிறார்.

தொடர்ந்து ஆனி மாத பூஜைகள் நாளை (15-ந் தேதி) தொடங்குகின்றன. அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்குகிறது.

கணபதி ஹோமம், உஷபூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தமன பூஜை, படிபூஜை ஆகிய சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

அதன்பிறகு 17-ந் தேதி வரை மூன்று நாட்கள் அஷ்டபந்தன கலச பூஜை நடைபெறும். வருகிற 19-ந் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.