இந்தியா

டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95 ரூபாய் அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது. இறுதியாக 94.78 ரூபாயாக உள்ளது

31 நாட்களாக நீடிக்கும் மேற்கு ஆசிய மோதல் காரணமாக டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இன்று வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி வர்த்தகத்தில் 165 பைசா வரை வீழ்ச்சியை சந்தித்தது.

93.62 ரூபாயில் வர்த்தகம் தொடங்கியது. பின்னர் 93.57 ரூபாயாக ஆதாயம் அடைந்தது. பின்னர் 95.22 ரூபாய்க்கு இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சியை சந்தத்தது. இறுதியாக 94.78 ரூபாயாக இருந்தபோது வர்த்தகம் நிறைவடைந்தது.

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 89 பைசா சரிந்து இதுவரை இல்லாத அளவிற்கு 94.85 ரூபாயாக இருந்தது. இன்று 7 பைசா ஆதாயம் அடைந்தது.