அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, ரிலையன்ஸின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இந்தியா வருகை தந்துள்ள நிலையில் நேற்று குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸின் பிரம்மாண்டமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டார். அப்போது முகேஷ் அம்பானி மற்றும் அவரின் குடும்பத்தினர் உடன் இருந்தார். இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோரும் உடன் இருந்தார்
இந்த சுத்திகரிப்பு நிலையம் ஒரு நாளைக்கு சுமார் 1.4 மில்லியன் பீப்பாய்களை சுத்திகரிக்கும் திறன் கொண்டதாகும்.
ஆனந்த் அம்பானியின் வனவிலங்கு மறுவாழ்வுத் திட்டமான 'வந்தரா' மற்றும் திருபாய் அம்பானி பசுமை எரிசக்தி ஜிகா வளாகம் ஆகியவற்றையும் ரூபியோ பார்வையிட்டார்.
எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ரூபாயோ நேற்று முன் தினம் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார்.
இந்நிலையில் நேற்று ரிலையன்ஸ் எண்ணெய் ஆலையை பாரவையிட்ட ரூபாயோ, ரிலையன்ஸின் ஆலையில் வெனிசுலா கச்சா எண்ணெயை சுத்திகரிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரவுன்ஸ்வில்லில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள புதிய சுத்திகரிப்பு ஆலை திட்டத்தில் ரிலையன்ஸ் செய்துள்ள பெரும் முதலீடும் இதற்கொரு முக்கிய காரணம் ஆகும்.
ஜாம்நகருக்குச் செல்வதற்கு முன்பு, மார்கோ ரூபியோ மும்பையில் தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் ஆகியோரைத் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சரின் இந்திய தொழிலதிபர்களுடனான இந்த சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.