Stock Market  
இந்தியா

Stock Market | இன்று இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி - ரூ.11 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்

இன்று மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்க போர் இன்று 24வது நாளை எட்டியள்ளது. உலகின் எண்ணெய், எரிவாயு வர்த்தக கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் இந்த போர் உலகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் இன்று (திங்கள்கிழமை) மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. இதனால் முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட ரூ.11 லட்சம் கோடியை இழந்தனர்.

இன்று சென்செக்ஸ் 1700 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து 73,000 புள்ளிகளுக்கும் கீழே சென்றது. நிஃப்டி சுமார் 550 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து 21,750 புள்ளிகளுக்கும் கீழே சென்றது. இது கடந்த 1 ஆண்டில் இல்லாத மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.

ஈரான் - இஸ்ரேல் மோதல் உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளன. குறிப்பாக அரபு நாடுகளின் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடந்த ஒரு மாதமாக இந்திய பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.

மேலும் அடுத்த சில மாதங்களுக்கு இந்த சரிவு தொடரும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதால் முத்தீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT