நரேந்திர மோடி
இந்தியா

மீன் மார்க்கெட்டுக்கு பிரதமர் மோடி பெயர் சூட்டப்பட்டதால் சர்ச்சை..!

குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சிக்கு உட்பட்ட மீன் மார்க்கெட்டுக்கு பிரதமர் மோடியின் பெயரான ஸ்ரீ நரேந்திர மோடி மொத்த மீன் விற்பளை மார்க்கெட் என பெயரிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில் மாநகராட்சி சார்பில் மிகப்பெரிய மீன் மார்க்கெட் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு முன், ஸ்ரீ நரேந்திர மோடி மொத்த விற்பனை மீன் மார்க்கெட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி சுத்த சைவம். அவர் மீன் சாப்பிடமாட்டார். அப்படி இருக்கும்போது, சைவ உணவை பின்பற்றும் பிரதமர் மோடி பெயரை வைத்துள்ளது நியாயமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நரேந்திர மோடி தனது வாழ்நாளில் ஒருபோதும் கடல் உணவை உட்கொண்டதில்லை. அவர் ஒரு முழுமையான சைவ உணவு உண்பவர். மோடி ஒரு சைவ உணவு உண்பவர் என்பதால், இந்தப் பலகையை வைக்கக்கூடாது என்று மீன் விற்பனையாளர் சுரேந்த்ரா லஷ்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால், சூரத் மாநகராட்சி மீன் மார்க்கெட்டிற்கான பெயர் இன்னும் பரிசீலனையில் உள்ளது. பெயர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

அதிகாரப்பூர்வமான தீர்மானம் ஏதுமின்றி அந்தப் பலகை வைக்கப்பட்டது. இதுகுறித்து நாங்கள் அவர்களிடம் தெரிவித்தோம். அவர்களே அதை அகற்றிவிடுவதாக வாய்மொழி உறுதியளித்துள்ளனர் என்று எஸ்.எம்.சி. (SMC) மத்திய மண்டலத்தின் செயல் பொறியாளர் ஆர்.டி. கஞ்சவாலா தெரிவித்துள்ளார்.