இந்தியா

தெலங்கானாவின் முக்கிய சாலைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயர் சூட்டல்!

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் இந்த பெயர்ப்பலகை திறக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள முக்கிய சாலைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி முன்னதாக அறிவித்தபடி, ஹைதராபாத்தின் நானக்ராம்குடாவில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தை ஒட்டியுள்ள ஒரு முக்கியச் சாலைக்கு, டொனால்ட் டிரம்ப் அவென்யூ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் மற்றும் தெலங்கானா துணை முதலமைச்சர் பட்டி விக்ரமார்க்கா ஆகியோர் நேற்று கலந்துகொண்ட ஒரு விழாவில், இந்தச் சிறப்புப் பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது.

ஹைதராபாத் மற்றும் அமெரிக்கா இடையேயான வணிகத் தொடர்பு, முதலீடுகள் மற்றும் இருதரப்பு நட்புறவை மேம்படுத்தும் அடையாளமாக இம்முடிவை தெலங்கானா அரசு எடுத்துள்ளது.