உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதனால் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.
அவர்களை மீட்கும் பணி 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு உணவு வழங்குவதற்காக 6 அங்குல குழாய் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் வழியாக கேமரா ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கேமரா, உள்ளே உள்ள தொழிலாளர்களை படம்பிடித்து அனுப்பியுள்ளது. ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. குழாய் மூலம் அனுப்பப்பட்ட உணவை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். இந்த வீடியோவை பார்த்து தொழிலாளர்களின் குடும்பம் நிம்மதி அடைந்துள்ளது.