மேற்கு வங்கத்தில் 152 தொகுதிகளுக்கு கடந்த 23-ந்தேதி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது மிகப்பெரிய அளவில் வன்முறை, மோதல், வாக்கு இயந்திரம் சேதப்படுத்துதல் போன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை. இதனால் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படவில்லை.
142 தொகுதிகளுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் (ஏப்ரல் 29-ந்தேதி) நடைபெற்றது. இதில் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. பல வாக்குச்சாவடிகளில் பாஜக சின்னர் டேப் ஒட்டி மறைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுபோன்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில் இரண்டு தொகுதிகளுக்கான உட்பட்ட 15 வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மகர்ஹாத் பாஸ்சிம் தொகுதியில் உள்ள 11 வாக்குச் சாவடிகளிலும், டைமண்ட் ஹார்பர் தொகுதியில் உள்ள 4 வாக்குச் சாவடிகளிலும் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால்டா தொகுதியில் இருந்து ஏராளமான புகார்கள் வந்துள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த முடிவும் இன்னும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.