PF 
இந்தியா

ஊதிய உச்சவரப்பு அதிகரித்ததன் எதிரொலி.. PF பங்களிப்பு ரூ.3,917 ஆக உயர்வு

ஊதிய உச்ச வரம்பினை மாதத்திற்கு ரூ.15,000ல் இருந்து ரூ. 25,000 ஆக மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிதியமான இபிஎப்ஓ கட்டாய ஊதிய உச்ச வரம்பினை மாதத்திற்கு ரூ.15,000ல் இருந்து ரூ. 25,000 ஆக உயர்த்தி உள்ளது.

டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, அரியானா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 15,000 என்ற எல்லையை தாண்டியுள்ளது.

எனவே சமூக பாதுகாப்பிற்குள் கூடுதலாக 1 கோடி தொழிலாளர்களை இணைக்கும் நோக்கில் கட்டாய ஊதிய உச்ச வரம்பினை மாதத்திற்கு ரூ.15,000ல் இருந்து ரூ. 25,000 ஆக மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

இது கடந்த செப்​டம்​பர் 17ம் தேதி முதல் அமலுக்கு வந்​துள்​ளது.

மாற்றம்

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,

முன்பு ரூ.15 ஆயிரம் உச்​சவரம்​பாக இருந்​த​போது, ஊழியர்​கள் தங்​கள் வைப்புநிதி சேமிப்பிற்கு மாதம் ரூ.1,800 செலுத்​தினர்.

இனி ரூ.25 ஆயிரம் சம்​பளம் பெறு​பவர்​கள் ரூ.3,000 (ரூ.25,000 சம்பளத்​தில் 12%) பங்​களிப்​பார்​கள்.

இதுத​விர, வேலை வழங்​கும் நிறுவன பங்​களிப்பு (3.67%) ரூ.550-லிருந்து ரூ.917 ஆக உயரும். இதன் மூலம் கட்​டாய மாத பிஎப் பங்​களிப்பு ரூ.3,917 ஆக உயர்கிறது.

மேலும், வேலை வழங்​கும் நிறு​வனங்​களின் பங்​களிப்​பிலிருந்து 8.3% பங்​களிப்​பான ரூ.2,083 இனி ஓய்​வூ​திய நிதி​யத்​துக்கு (இபிஎஸ்) செல்​லும் (இதற்கு முன்பு இது ரூ.1,250 ஆக இருந்​தது).

ஓய்வூதியம்

அடிப்படைச் சம்பளம் ரூ.15,000-லிருந்து ரூ.25,000க்குள் இருக்கும் ஊழியர்களின் மாதாந்திர பி.எப் பிடித்தம் அதிகரிப்பதால், அவர்களது கைக்கு வரும் சம்பளம் சற்று குறையக்கூடும்.

ஆனால் ஊழியர்கள் பணி ஓய்வு பெறும்போது கிடைக்கும் மாதாந்திர ஓய்வூதியத் தொகை கணிசமாக அதிகரிக்கும்.

ஊழியர்களின் வைப்புநிதியுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் பங்களிப்பு வரம்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT