மக்களவையில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியபோது, எதிர்க்கட்சிகளை விமர்சித்து தெரிவித்த சில கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அவை நடவடிக்கைகளின் போது, அரசின் செயல்பாடுகள் மற்றும் மசோதாக்கள் குறித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய ரிஜிஜு, எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ரிஜிஜுவின் சில கருத்துகள் அவை விதிமுறைகளுக்கு முரணானவை என்றும், அவை எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், மக்களவைத் தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவை மரபுகளுக்கும் விதிகளுக்கும் ஒவ்வாத சில வார்த்தைகள் மற்றும் குறிப்புகளை அதிகாரப்பூர்வ பதிவிலிருந்து நீக்க உத்தரவிட்டார்.
நாடாளுமன்ற நடைமுறைகளின்படி, அவையில் பேசப்படும் கருத்துகள் அவதூறாகவோ, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாகவோ அல்லது அவையின் கண்ணியத்தை பாதிக்கும் வகையிலோ இருந்தால், அவற்றை பதிவிலிருந்து நீக்குவதற்கு மக்களவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. நீக்கப்பட்ட கருத்துகள் அதிகாரப்பூர்வ அவைக் குறிப்பில் இடம்பெறாது.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், நாடாளுமன்ற விவாதங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற வேண்டும் என்பதையும், அவை மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டியது அவசியம் என்பதையும் இந்த நடவடிக்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவை மற்றும் மாநிலங்களைவக்கு வராதது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அதற்கு நாடளுமன்ற விவகாரங்களுக்கான துறை அமைச்சர் ரிஜிஜு, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கங்களுக்கு மத்தியில், எந்த அமைச்சர் அவைக்கு வர வேண்டும் என்பதை எதிர்க்கட்சியால் தீர்மானிக்க முடியாது என்று ரிஜிஜு என்றார். அப்போது சில வார்த்தைகளை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
அமித் ஷா தினந்தோறும் நாடாளுமன்றத்திற்கு வருகை தருகிறார். நள்ளிரவு வரை அங்கேயே இருக்கிறார் என்றார்.