இந்தியா

‘விவாதத்திற்கு தயார்’ - எதிர்க்கட்சி தலைவர் சவாலை ஏற்ற பினராயி விஜயன்

எதிர்க்கட்சித் தலைவரின் பொதுவிவாத சவாலை ஏற்றுக்கொண்டார் முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரளாவில் ஏப்.9ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் விடுத்த பொது விவாதத்திற்கான சவாலை ஏற்றுக் கொண்டுள்ளார் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியை விட, இடதுசாரி (LDF) ஆட்சியில் குறைந்த எண்ணிக்கையிலான வீடுகளே கட்டப்பட்டதாக வி.டி.சதீசன் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், இது தொடர்பாகப் பொது விவாதத்திற்கு வருமாறு பினராயி விஜயனுக்கு சவால் விடுத்திருந்தார்.

இதனையடுத்து இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அரசின் சாதனைகளை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்ட பினராயி விஜயன், அதில் குறிப்பிடப்பட்டுள்ள "ஏ-பிளஸ்" சாதனைகள் குறித்து விவாதிக்கத் தான் தயார் என்று அறிவித்தார்.

“விவாதத்திற்குத் தயாராக இருப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளதால், இடத்தையும், நேரத்தையும் அவரே முடிவு செய்யலாம். அதன்படி நான் அங்கு இருப்பேன். மீதியை மக்களே தீர்மானிக்கட்டும்” என வி.டி. சதீசன் உடனடியாகப் பதிலளித்துள்ளார்.