மேற்கு வங்காளத்தின் ஃபால்டா சட்டமன்றத் தொகுதி மறு வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலை 9 மணி நிலவரப்படி தோராயமாக 15% முதல் 18% வரை வாக்குகள் பதிவாகியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி 11 மணி அளவில் சுமார் 31.5% வாக்குகள் பதிவாகியுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெயிளின் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட நேரமாக வரிசைகளில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
முந்தைய தேர்தலின்போது வன்முறை மற்றும் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்திருந்தது. ஆனால் இன்று அனைத்து 285 பூத்களிலும் பலத்த மத்திய பாதுகாப்பது படையுடன் தேர்தலில் எந்த விதமான பிரச்சனைகளும் இல்லாமல் அமைதியாக நடந்து வருகிறது.
மேலும், கடந்த முறை வெப் கேமராக்கள் மறைக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, இன்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் ஆணையத்தின் நேரடி வெப்கேமரா கண்காணிப்பு மிகத்துல்லியமாகச் செயல்பட்டு வருகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் இறுதி நேரத்தில் போட்டியில் இருந்து விலகியதால், தற்போதைய முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக வேட்பாளர் தேபாங்சு பாண்டா மற்றும் இடதுசாரி வேட்பாளர் சாம்பு குர்மி ஆகியோருக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
இன்று மாலை 6 மணி வரையிலும் பொதுமக்கள் வாக்களிக்கலாம். இன்று மாலைக்குள் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சதவீதம் 80%-ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.