இந்தியா

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி

ஆகஸ்ட் 3 முதல் 5 வரை மூன்று நாட்கள் நிதிக்குழு கூட்டம் கூட்டப்பட்டது.

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமில்லை. ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். இதனால் வீடு, வாகனக் கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம் என அழைக்கப்படுகிறது.

நிதிச்சூழலுக்கு ஏற்ப இந்த வட்டி விகிதத்தை மாற்றுவது குறித்து ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூடி ஆலோசிக்கும்.

அந்த வகையில் 2026-27 நிதியாண்டுக்காக ஆகஸ்ட் 3 முதல் 5 வரை மூன்று நாட்கள் நிதிக்குழு கூட்டம் கூட்டப்பட்டது.

இன்று கூட்டத்தின் பின் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை, ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

மேற்காசிய போரால் எரிபொருள், எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய பொருளாதாரத்தின் மீதான பணவீக்க அபாயங்களை உணர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நடப்பு 2026-27 நிதி ஆண்டிற்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதம் ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இது முன்பு கணிக்கப்பட்ட 6.6 சதவீதத்தை விட சற்று அதிகமாகும்.

முதல் காலாண்டிற்கான பணவீக்கக் கணிப்பு எதிர்பார்க்கப்பட்டதை விடக் குறைவாக உள்ளது. அதாவது, பணவீக்கம் தற்போது 5 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது. இது முன்பு எதிர்பார்க்கப்பட்ட 5.1 சதவீதத்தை விட குறைவானதாகும் என தெரிவித்துள்ளார்.