இந்தியா

ஒடிசாவில் 1,500 பேர் அமரக்கூடிய பிரமாண்ட தியான மையம்: ஆன்மீக குரு ராஸேஸ்வரி தேவி அதிரடி அறிவிப்பு!

ஒடிசாவில் 1500 பேர் அமரக்ககூடிய வகையில் பிரமாண்ட யோகா மையம் கட்டப்பட இருப்பதாக பெண் ஆன்மீக குரு தெரிவித்துள்ளார்.

உலக தியான தினத்தை 2026 முன்னிட்டு, ஒடிசா மாநிலத்தின் கோர்தா மாவட்டத்தில் உள்ள தங்கி என்ற பகுதிக்கு அருகில் 1,500-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் அமரக்கூடிய பிரமாண்ட யோகா மற்றும் தியான மையக் கட்டிடம் கட்டப்படவுள்ளதாகப் பிரபல ஆன்மீகத் தலைவர் ராஸேஸ்வரி தேவி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

கிழக்கு இந்தியாவில் யோகா கல்வி, தியான முகாம்கள் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கான முதன்மை மையமாக இந்தத் தியான கூடம் விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தை ராஸேஸ்வரி தேவியால் 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 'பிரஜ் கோபிகா சேவா மிஷன்' என்ற அமைப்பு முன்னெடுத்துச் செயல்படுத்துகிறது.

அனைத்து செயல்பாடுகளிலும் ஒடிசா தியான மையத்தோடு சேர்ந்து செயல்படுத்தி கொண்டு வருவதாகவும் கூறியுள்ளது.

மேலும் வரும் 2026 ஜூன் 11 முதல் ஜூன் 17 வரை உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் ஒரு வாரத்திற்கு மாபெரும் தியான முகாம் ஒன்றையும் நடத்துவதாக இந்த அமைப்பு அறிவித்துள்ளது. இந்த முகாமில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உட்பட சுமார் 2500 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த முகாமில் பாரம்பரிய இந்திய ஆன்மிகம் தொடர்பாக நெறிமுறைகளின் படி நடத்தப்படவுள்ளன.

யார் இந்த ராஸேஸ்வரி தேவி

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தேசிய அளவில், "யார் இந்த ராஸேஸ்வரி தேவி?" என்று கூகுள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இணையவாசிகள் பலரும் தீவிரமாகத் தேடத் தொடங்கியுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாயில் பிறந்த இவர், கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் உயர்கல்வி பயின்றுள்ளார். தனது 22 வது வயதில் உலக வாழ்க்கையைத் துறந்து துறவி வாழ்க்கையில் ஈடுபட தொடங்கினார்.

நவீன காலத்தில் மிகச்சிறந்த ஆன்மிக குருமார்களில் ஒருவராக இருந்தவர் ஜகத்குரு சுவாமி ஸ்ரீ கிருபாலு ஜி மகாராஜ் அவர்கள் ஸ்ரீ கிருஷ்ண பக்தி மற்றும் பக்தி யோகாவை பரப்புவதில் உலகளவில் பிரபலமாவர் என்பதால், அவர்களின் வழிகாட்டுதளின் கீழ் ராஸேஸ்வரி தேவி தனது ஆன்மிக பாதையை தேர்ந்தெடுத்துள்ளார்.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ராஜேஸ்வரி தேவி இந்திய முழுவதும் ஆன்மிக மற்றும் சமூக விழிப்புணர்வுப் பணிகளை சிறப்பாக செய்து கொண்டி வருகிறார். இவரது 'பிரஜ் கோபிகா சேவா மிஷன்' அமைப்பு மூலம் ஒடிசா மாநிலம் முழுவதும் மட்டும் இதுவரை 21 ஆன்மிக மற்றும் தியான மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

ஆன்மிகம் மட்டுமில்லாமல், இளைஞர்கள் மற்றும் பொது மக்களுக்கு தியான விழிப்புணர்வை ஏற்படுத்த கல்வி, மருத்துவம் மற்றும் கலாசார மேம்பாட்டுத் திட்டங்களையும் இவர்களது நிறுவனம் செய்து வருகின்றது.

வேத தத்துவங்களை தற்கால நவீன வாழ்க்கைக்கு ஏற்ப எளிய முறையில் போதிக்கும் இவர், ஸ்ரீ கிருஷ்ண பக்திக்கும் தனது குருவை போலவே செயல்படுத்தி செய்து கொண்டு வருகிறார்.