இந்தியா

ராமர் கோவில் காணிக்கை திருட்டை அரசியலாக்குவதா? - காங்கிரசுக்கு கங்கனா ரணாவத் கண்டனம்

சனாதன கலாச்சாரம், நம்பிக்கை மற்றும் இந்தியப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் பா.ஜ.க. எப்போதும் உறுதியாக இருந்து வருகிறது.

அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் காணிக்கைப் பொருட்கள் திருடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க. எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

காங்கிரஸ்

"காங்கிரஸ் கட்சியின் இரட்டை நிலைப்பாடு குறித்து பொதுமக்களுக்கு நன்கு தெரியும். கோடிக்கணக்கான இந்தியர்களின் நம்பிக்கையின் மையமாக கடவுள் ராமர் இருக்கிறார். பல நூற்றாண்டுகால போராட்டத்திற்கும் தியாகத்திற்கும் பிறகே ராமர் கோவில் கட்டப்பட்டது.

காங்கிரஸ் ஆரம்பத்தில் அதை எதிர்த்தது, இப்போது திருடப்பட்ட காணிக்கைப் பொருட்கள் பிரச்சனையை எழுப்பி மத உணர்வுகளை அரசியல்மயமாக்குகிறது.

சனாதன கலாச்சாரம்

சனாதன கலாச்சாரம், நம்பிக்கை மற்றும் இந்தியப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் பா.ஜ.க. எப்போதும் உறுதியாக இருந்து வருகிறது. பா.ஜ.க. ஒருபோதும் நம்பிக்கையை வாக்கு வங்கி அரசியலுக்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தியதில்லை, மாறாக அதை நாட்டின் கலாச்சார அடையாளத்தின் ஒரு பகுதியாகவே கருதுகிறது.

மத உணர்வுகளைச் சுரண்டும் அரசியலில் கவனம் செலுத்துவதை விடுத்து, வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் பொது நலனில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.