இந்தியா

Rajya Sabha | மாநிலங்களவைக்கு ரம்ஜான் விடுமுறை அறிவிப்பு

மாலை மலர்

சி.பி. ராதாகிருஷ்ணன் திங்களன்று உறுப்பினர்களுக்குத் தெரிவித்தார்.

மார்ச் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் பண்டிகைகள் காரணமாக அவைக் கூட்டங்களை நடத்த வேண்டாம் என்று சில உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை அரசு ஏற்று, மார்ச் 28 மற்றும் 29 ஆகிய வார இறுதி நாட்களில் மாநிலங்களவை செயல்படும் என்று அதன் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (திங்கள் கிழமை) உறுப்பினர்களுக்குத் தெரிவித்தார்.

மார்ச் 11, 2026 அன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுவின் கூட்டத்தின்போது, மார்ச் 19 முதல் நவராத்திரி, குடிபாட்வா, ரமலான் போன்ற பல்வேறு பண்டிகைகள் தொடங்க இருப்பதால், அத்தேதிகளில் அவை கூட்டங்களை நடத்துவது பொருத்தமாக இருக்காது என்று சில உறுப்பினர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

"இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அரசு சாதகமாகப் பரிசீலித்துள்ளது என்பதை உறுப்பினர்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அதன்படி, வியாழன், மார்ச் 19, 2026 மற்றும் வெள்ளி, மார்ச் 20, 2026 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த அவைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

எனினும், இவ்வாறு இழக்கப்படும் நேரத்தை ஈடுசெய்யும் வகையில், அதற்கு மாற்றாக சனிக்கிழமை, மார்ச் 28, 2026 மற்றும் ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2026 ஆகிய தேதிகளில் அவை கூடும். உறுப்பினர்கள் தயவுசெய்து இதனைக் குறித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்," என்று மாநிலங்களவைத் தலைவர் கூறினார்.