இந்தியா

மாநிலங்களவை தேர்தல்: 18 பேர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிப்பு

ம.பி.யில் பாஜக 3 இடங்களை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலியாக உள்ள 26 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதற்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்த 26 பேரில் 18 பேர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 18 பாஜக வேட்பாளர்கள், 4 காங்கிரஸ் வேட்பாளர்கள், 3 தெலுங்கு தேசம் வேட்பாளர்கள், 1 ஜனசேனா வேட்பாளர் அடங்குவர்.

காங்கிரசில் போட்டியின்றி வெற்றி பெற்றவர்களில் அதன் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேரா உள்ளிட்டோர் அடங்குவர். அவர்கள் இருவரும் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல குஜராத்தில் காலியாக இருந்த 4 இடங்களில் மூன்றை பாஜக கைப்பற்றியுள்ளது. முன்னதாக இந்த மூன்றில் ஒன்று காங்கிரஸ் வசம் இருந்த நிலையில் பாஜக இம்முறை மூன்றையும் கைப்பற்றியுள்ளது.

ம.பி. சர்ச்சை

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மீனாட்சி நடராஜனின் வேட்புமனு, தெலுங்கானாவில் உள்ள பழைய வழக்கை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையம் நிராகரித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அங்கு மொத்தம் காலியாக இருந்த 3 மாநிலங்களவை இடங்களில் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக தனது வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்த நிலையில் அந்த மனு இன்று விசாரிக்கப்படுகிறது.

ஆனால் தேர்தல் நடைமுறையை விசாரணை முடியும் வரை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் மபியில் பாஜக 3 இடங்களை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல்

தற்போது 18 பேர் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள 8 இடங்களுக்கு மட்டும் வரும் ஜூன் 18 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. ஜார்கண்டில் 2, மணிப்பூர், மேகாலயா, அசாம், மிசோரம், அருணாச்சல பிரதேசம், மிசோரம், மகராஷ்டிரா, தமிழ்நாடு ஆகியவ்ற்றில் 1 இடம் ஆகியற்றுக்கு ஜூன் 18 வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

தற்போதைய நிலவரப்படி மாநிலங்களவையில் மொத்தம் உள்ள 245-இல் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு 147 எம்பிக்கள் உள்ளனர். எதிர்கட்சிக்கு 67 இடங்களும் பிற பிராந்திய காட்சிகளுக்கு 28 எம்பிகளும் உள்ளனர்.