ராஜ்நாத் சிங்
இந்தியா

சிந்தூர் ஆபரேஷன் தொடர்பாக பாராளுமன்றத்தில் தவறான தகவல்: ராஜ்நாத் சிங் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது 6 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு விமானப்படை வீரர் வீர மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தான் நாட்டிற்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது துல்லியமாக தாக்குதல் நடத்தியது. இதற்கு சிந்தூர் ஆபரேஷன் என்று பெயரிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்த சில நாட்களுக்கு இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு போர் நிறுத்தப்பட்டது.

இந்திய விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூற்று

தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய 5-க்கும் அதிகமான விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என்று பாகிஸ்தான் தெரிவித்தது. ஆனால், இந்தியா அதை மறுத்து வந்தது. அமெரிக்க அதிபர் டிரம்பும், இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்தார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியாவின் இழப்பு குறித்து தகவல் தெரிவிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், மத்திய அரசு எந்த தகவலையும் வெளியிடவில்லை.

பாராளுமன்ற விவாதம்

பாராளுமன்றத்தில் சுமார் 16 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. அப்போது எந்தவொரும் வீரரையும் இந்தியா இழக்கவில்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.

ஆனால், சில தினங்களுக்கு முன்னதாக, 5 ராணுவ வீரர்கள், ஒரு விமானப்படை வீரர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் ராஜ்நாத் சிங் பாராளுமன்றத்தில் உண்மையை மறைத்து, பாராளுமன்றத்தை தவறாக வழி நடத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்த நிலையில், அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் ஒரு குறிப்பிட்ட பேச்சை எடுத்துக் கொண்டு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதாக விளக்கம் அளித்துள்ளது.