இந்தியா

உள்நாட்டில் தயாரான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் INS Aridaman இந்திய கடற்படையில் இணைப்பு

சுமார் 7,000 டன் எடை கொண்ட இந்தக் கப்பல் கடலுக்கு அடியில் மிகவும் அமைதியாகச் செல்லும்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் அரிதமான் இந்திய கடற்படையில் இன்று இணைக்கப்பட்டது. விசாகப்பட்டினம் சென்றுள்ள மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ‘அரிதமான்’ நீர்மூழ்கி கப்பலை தொடங்கி வைத்தார்.

ஐஎன்எஸ் அரிதமான், இந்தியாவின் ரகசியத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலாகும். இது ஐஎன்எஸ் அரிஹந்த் மற்றும் ஐஎன்எஸ் அரிகாட் ஆகியவற்றை விட அதிக சக்தி வாய்ந்தது.

இது 3,500 கி.மீ. தூரம் செல்லக்கூடிய எட்டு ஏ-4 ஏவுகணைகளையோ அல்லது 750 கி.மீ. தூரம் செல்லக்கூடிய 24 ஏ-15 ஏவுகணைகளையோ ஏவக்கூடியது.

சுமார் 7,000 டன் எடை கொண்ட இந்தக் கப்பல், கடலுக்கு அடியில் மிகவும் அமைதியாகச் செல்லும் தொழில்நுட்பத்தைக் கொண்டது. இதனால் எதிரி ரேடார்களால் இதைக் கண்டறிவது சிரமம் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT