இந்தியா

குஜராத்: கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 11 சிறுவர்கள் தப்பியோட்டம்

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரு சிறுவன் சில மணி நேரங்களிலேயே பயந்துபோய் மீண்டும் அதே கூர்நோக்கு இல்லத்திற்கு தானாகவே திரும்பினான்.

கஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் சிறுவர் கூர்நோக்கு இல்லத்திலிருந்து 11 சிறுவர்கள் சினிமா பாணியில் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை 11 மணியளவில் ராஜ்கோட் கூர்நோக்கு இல்லத்தில் இருந்த 11 சிறுவர்கள், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர்களின் கவனத்தைத் தந்திரமாகத் திசைதிருப்பியுள்ளனர்.

கூர்நோக்கு இல்லத்தின் ஜன்னல் இரும்புக் கம்பிகளை உடைத்து சிசிடிவி கேமராக்களையும் அடித்து நொறுக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

தப்பியோடிய 11 சிறுவர்களில், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரு சிறுவன் சில மணி நேரங்களிலேயே பயந்துபோய் மீண்டும் அதே கூர்நோக்கு இல்லத்திற்கு தானாகவே திரும்பினான்.

இச் சம்பவத்திற்கு முக்கிய மூளையாக இருந்த இரண்டு சிறுவர்களை அகமதாபாத் அருகே போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

தப்பியோடிய மீதமுள்ள 8 சிறுவர்களைப் பிடிக்க போலீசார் தனிப்படைகள் அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.