அசோக் கெலாட் 
இந்தியா

நான் மூன்று முறை முதல்வராக இது மட்டுமே காரணம்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

எனது சமூகத்தில் இருந்து நான் மட்டுமே எம்.எல்.ஏ.-வாக இருக்கிறேன் என பட்டமளிப்பு விழாவில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் உள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, ‘‘நான் மூன்று முறை முதலமைச்சராகியுள்ளேன். நான் சமூகம் அடிப்படையில் முதலமைச்சராகவில்லை. என்னுடைய சமூகத்தில் நான் மட்டுமே எம்.எல்.ஏ. 36 சமூக மக்களும், ராஜஸ்தான் மாநில மக்களும் என் மீது நம்பிக்கை வைக்காமல் இருந்திருந்தால், முதலமைச்சர் என்ற அந்தஸ்துடன் தற்போது உங்கள் முன்னால் நின்றிருக்க முடியாது’’ என்றார்.