இந்தியா

சமூக நீதிக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர் கருணாநிதி - ராகுல் காந்தி புகழாரம்

ஒவ்வொரு இந்தியரையும் சமமாக நடத்தும் அரசியலமைப்பில் கலைஞர் கருணாநிதி நம்பிக்கை கொண்டிருந்தார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

சமூக நீதிக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் கண்ணியத்திற்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் கலைஞர் கருணாநிதி வாழ்க்கை முழுவதும் போராடினார்.

அவர் முதலமைச்சர் மட்டுமல்ல. ஒரு எழுத்தாளர், கவிஞர், சிந்தனையாளர். ஒவ்வொரு இந்தியரையும் சமமாக நடத்தும் அரசியலமைப்பில் கலைஞர் கருணாநிதி நம்பிக்கை கொண்டிருந்தார்.

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் எனது பணிவான அஞ்சலிகள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.