ராகுல் காந்தி- ஜே.பி. நட்டா
இந்தியா

ராகுல் காந்தி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார்: ஜே.பி. நட்டா குற்றச்சாட்டு

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கடந்த 15 நாட்களாக நாடாளுமன்ற நடவடிக்கைகளை வேண்டுமென்றே சீர்குலைத்து வருவதாகவும் வருவதாக அமைச்சர் ஜே.பி. நட்டா குற்றம்சாடடியுள்ளார்.

ராகுல் காந்தியின் கோரிக்கையை ஏற்று, நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு ஒப்புக்கொண்ட போதிலும், காங்கிரஸ் தலைவர் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே இருந்ததாக மத்திய அமைச்சர் நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஜே.பி. நட்டா கூறியதாவது:-

ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தார். உள்துறை அமைச்சர் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டபோது, ​​காங்கிரஸ் தலைவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, ராமர் கோயில் நன்கொடை தொடர்பான முறைகேடு புகார்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரத் தொடங்கினார்.

விவாதிக்க நாங்கள் தயார்

அவர்கள் ஏன் விவாதத்திலிருந்து ஓடுகிறார்கள்? நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன் ராகுல் காந்தி அவர்களே, விவாதத்திலிருந்து ஓடாதீர்கள். நாங்கள் தயாராக இருக்கிறோம். அவைக்குள் எந்தவொரு விவகாரம் குறித்தும் விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஓடாதீர்கள்.

அவையின் செயல்பாட்டைத் தடுப்பதே அவரது நோக்கம் போலத் தெரிகிறது. அவை செயல்படுவதை அவர் விரும்பவில்லை. அதனால்தான் கடந்த 15 நாட்களாக அவர் நடவடிக்கைகளைச் சீர்குலைத்து வருகிறார்.

பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார் ராகுல் காந்தி

ராகுல் காந்தி பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்கிறார். எதிர்மறையான அரசியலில் ஈடுபடுகிறார். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நான் ராகுல் காந்திக்குச் சவால் விடுகிறேன். அவைக்கு வாருங்கள், நாங்கள் விவாதத்திற்குத் தயாராக இருக்கிறோம். மேலும் சொல்கிறேன், உங்களுக்குத் தகுந்த பதில் கிடைக்கும்.

தவறான தகவல்களைப் பரப்பாதீர்கள். ஜந்தர் மந்தரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை, அங்கு துப்பாக்கிச் சூடு நடத்த எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.