இந்தியா

ராகுல் காந்தி சொத்து விவகாரம்: சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கான உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து!

எந்தவொரு உத்தரவும் பிறப்பிப்பதற்கு முன்பு ராகுல் காந்தியை ஒரு தரப்பினராகச் சேர்த்து அவரது கருத்தையும் கேட்க வேண்டும்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சொத்து விவரங்கள் குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உத்தரவிட்ட, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜெய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்கள் வருமானத்துக்கு அதிகமாக உள்ளதாகக் கூறி, கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக தொண்டர் விக்னேஷ் சிஷிர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்தப் புகார் குறித்து விசாரிக்க சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தநிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

மேலும் வழக்கின் ஏற்புத்தன்மை உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் புதிதாக விசாரிக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மனு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், எந்தவொரு உத்தரவும் பிறப்பிப்பதற்கு முன்பு ராகுல் காந்தியை ஒரு தரப்பினராகச் சேர்த்து அவரது கருத்தையும் கேட்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT