ராகவ் சதா
இந்தியா

பஞ்சாப் சட்டமன்ற தேர்தல்: ஆம் ஆத்மியில் இருந்து சென்றவர்களுக்கு பாஜக-வின் முக்கியமான இரண்டு குழுவில் இடம்

ராகவ் சதா, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பகவத் மான் முதல்வராக இருந்து வருகிறார். அடுத்த வருடம் தொடக்கத்தில் பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

தேர்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சில எம்.பி.க்கள், அக்கட்சியில் இருந்து விலகி பாஜக-வில் இணைந்தனர். அதில் முக்கியமானவர் மாநிலங்களவை எம்.பி. ராகவ் சதா ஆவார்.

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு

அடுத்த வருடம் நடைபெற இருக்கும் தேர்தலுக்கான பணிகளை பாஜக ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்த நிலையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு மற்றும் ஆம் ஆத்மி ஆட்சியில் நிறைவேற்றப்படாத வாக்குறுதி, தவறான நிர்வாகம் குறித்த தகவலை பெற Chargesheet குழு என இரண்டு குழுக்களை அமைத்துள்ளது. இந்த இரண்டு குழுக்களிலும் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி வந்த எம்.பி.க்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பஞ்பா மாநில பாஜக தலைவர் கெவால் சிங் தில்லான் இந்த குழுவை அமைத்துள்ளார்.

அவினாஷ் ராய் கண்ணா தலைவர்

தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவில் முன்னாள் எம்.பி.யும், முன்னாள் மாநில பாஜக தலைவருமான அவினாஷ் ராய் கண்ணா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவில் மான்ப்ரீத் சிங் பாதல், அஷ்வானி சர்மா, மனோரஞ்சன் கலியா, சோம் பிரகாஷ், ராணா குர்மித் சிங் சோதி, அஷ்வானி சேக்ரி, சட்நாம் சிங் சந்து, ராகவ் சதா, ரஜிந்தர் குப்தா, ஹர்பஜன் கிங், பிரம்பால் கவுர், ஹெச்.எஷ். பூல்கா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

கெவால் தில்லான் தலைவர்

சார்ஜ்ஷீட் குழுவுக்கு கெவால் தில்லானுக்கு முன் தலைவராக இருந்த முன்னாள் எம்.பி. சுனில் ஜாகர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் இக்பால் சிங் லால்பூரா, விஜய் சம்ப்ளா, ஷ்வைட் மாலிக், பிரனீத் கவுர், ரவ்னீத் சிங் பிட்டு, தினேஷ் பாபு, சுஷில் ரிங்கு, கெஜ்ஜா ராம், விக்ரம்ஜித் சிங் சனே, ஆஷோக் மித்தல், சந்தீப் பதாக், எஸ்.எஸ். சன்னி மற்றும் ஜெக்மீத சிங் பிரார் இடம் பிடித்துள்ளனர்.

ராகவ் சதா

ராகவ் சதா, ஹர்பஜன்சிங், ரஜிந்தர் குப்தா ஆகியோர் ஆம் ஆத்மி கட்சியில் எம்.பி.யாக இருந்தவர்கள். அதேபோல் சார்ஜ்ஷீட் குழுவில் இடம் பிடித்துள்ள சந்தீப் பதக், அஷோக் மித்தல், விக்ரம்ஜித் சிங் சனே ஆகியோரும் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT