டெல்லியில் குவாட் கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு இன்று தொடங்கியது.
இந்தியாவின் அழைப்பின்பேரில் இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ, ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி, ஆஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர் பென்னி வாங் ஆகியோர் இந்தியா வந்துள்ளனர்.
மாநாட்டின் தொடக்கமாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்ற 3 நாட்டு பிரதிநிதிகளுடன் இணைந்து குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்தோ-பசிபிக் பிராந்திய நலன்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. எரிசக்தி ஏற்றுமதி, கடல்வழிப்பாதையில் சுதந்திர வர்த்தகம் ஆகியவை இதில் விவாதிக்கப்படும்.
மாநாட்டிற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், குவாட் கூட்டமைப்பு குறித்துப் பேசுகையில், "இந்தோ-பசிபிக் பிராந்தியம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறப்போகிறது. இது உலகின் மிகப்பெரிய எரிசக்தி வாழ்வாதாரமாக மாறும்." என்று தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே எரிசக்தி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு வளர்ச்சிக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஈரான் போரால் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கப்பல் போக்குவர்த்து தடைப்பட்டு எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில் போக்குவரத்து டெல்லியில் நடைபெறும் இந்த குவாட் மாநாடு உலகளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.