பஞ்சாப் மாநிலத்தில் ஒரே கட்டமாகவும், உத்தர பிரதேசத்தில் மூன்றாவது கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
பஞ்சாபில் காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்பட்டது. காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய உடன், அம்மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களித்தனர். பிற்பகல் 1 மணி நிலவரப்படி பஞ்சாப்பில் 34.10 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது வாக்கை பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர்சிங், இந்த தேர்தலுக்கு பிறகு பஞ்சாப்பில் காங்கிரஸ் அழிந்துவிடும் என தெரிவித்துள்ளார்.பாட்டியாலாவில் தாம் வெற்றி பெறுவது உறுதி என்றும் அவர் குறிப்பிட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறும் 3ம் கட்ட தேர்தலில் பிற்பகல் 1 மணி வரை 35.88 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.வேலைவாய்ப்பு குறித்த பொய்யான வாக்குறுதி அளித்த ஆளும் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிக்குமாறு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்... உத்தர பிரதேசத்தில் பதிவாகும் வாக்குகள் மூலம் நாடு முழுவதும் மாற்றம் வரும் - ராகுல் காந்தி தகவல்