பகவத் மான்
இந்தியா

இப்படித்தான் பழி வாங்குகிறார்கள்: ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தியது தொடர்பாக பஞ்சாப் முதல்வர் குற்றச்சாட்டு

பாரீஸ் சென்று திரும்பியபோது பஞ்சாப் முதல்வர் பகவத் மான் தடுத்து நிறுத்தப்பட்டார்.

பஞ்சாப் மாநில முதல்வராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவத் மான் உள்ளார். இவர் பாரீஸ் செல்ல மத்திய அரசிடம் அரசியல் தொடர்பான அனுமதி கேட்டார். ஆனால், மத்திய அரசு அவருக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது.

அனுமதி அளித்த உயர்நீதிமன்றம்

ஆனால், பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததன் பேரில் வெளிநாடு சென்றார். கடந்த 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெற்ற சர்வதேச உணவு வர்த்தக கண்காட்சியில் கலந்து கொண்டார்.

பின்னர் டெல்லி விமான நிலையம் வந்தபோது, சுங்கத்துறை அதிகாரிகள் அவரையும், அவருடன் சென்ற அதிகாரிகளையும் தடுத்து நிறுத்தினர்.

இது தொடர்பாக பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் கூறுகையில், இப்படித்தான் பழி வாங்குகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பகவத் மான் கூறியதாவது:-

அவர்கள் உடமைகளைச் சோதிப்பதாகக் கூறினர். எதையும் கண்டறியாத நிலையில், நாங்கள் செல்லலாம் என்று கூறினர்.

நான் எனது குழுவினருடன் விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்றபோது, ​​மேலிடத்திலிருந்து அழுத்தம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பிறகு, அவர்கள் எங்களிடம் 50,000 ரூபாய் அபராதம் செலுத்தக் கோரினர். அதற்கு நாங்கள், இது உங்கள் வேலையைப் பொறுத்த விஷயம் என்றால், நீங்கள் அபராதத்தை விதித்துக் கொள்ளலாம்.

சுங்கத்துறை தலைவர் ஞானேஷ் குமாரின் சகோதரர்

டெல்லி விமான நிலையத்தின் சுங்கத்துறை தலைவர் யார்? அவர், தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமாரின் சகோதரரான மணிஷ் ஆவார். இப்படித்தான் அவர்கள் பழிவாங்குகிறார்கள்.

இவ்வாறு பகவத் மான் தெரிவித்தார்.

பஞ்சாப் மாநில சட்டசபையில் ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற SIR முறைகேடு தொடர்பாக தனி விசாரணை நடத்த வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

SCROLL FOR NEXT